×

உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவு பெண்கள் போராட்டம்

திண்டுக்கல் : பழனி அருகே கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றோரு பிரிவு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில் 250-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்துவதற்கு மற்றோரு பிரிவை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து தீண்டாமையை கடைப்பிடித்து வந்தன. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மாலை பட்டியலினத்தை சேர்ந்த சிலர் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றோரு பிரிவை சேர்ந்த பெண்கள் சிலர் கோயில் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலத்த பாதுகாப்புடன் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.   


Tags : Uchi Kaliamman , Uchi, Kaliamman, Temple, List, People, Worship, Conduct, Struggle
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து...